Tuesday, February 2, 2021


script data-ad-client="ca-pub-7622963767210638" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></scri

ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி... பிக்பாஸ் வின்னர்கள் வென்றது எப்படி?!

பிக்பாஸ் சீசன் 4
பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த 4 சீசன்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என்னென்ன, அதன் வெற்றியாளர்கள் எப்படி?!

பிக்பாஸ் சீசன் 1

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது!
25.6.17 முதல் 30.9.17 வரை (98 நாட்கள் )

பிக்பாஸ் சீசன் ஒன்றில் முதலில் 15 போட்டியாளர்களும் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக (wild card entry) நான்கு பேரும் நுழைந்தனர். முதல் நான்கு ஃபைனலிஸ்ட்டாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், ஆரவ், சினேகன், ஹரிஷ் கல்யாண் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன். இதில் டிக்கெட் டு ஃபினாலே (ticket to finale) வென்றவர் சினேகன்.

பிக் பாஸ் சீசன் 1-ன் வெற்றியாளர் ஆரவ். பிக்பாஸ் சீசன் 1-ஐ பொறுத்தவரையில் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவைப் பற்றி பேசாமல் ஆரவைப்பற்றி பேச முடியாது . ஆம், சீசன் ஒன்றில் வெற்றியாளரை விட மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஓவியா. முதன்முதலில் போட்டியாளர்களின் பெயரில் ஆர்மியை உருவாக்கியது ஓவியா ரசிகர்களே. ஓவியா ஆர்மி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. ஓவியாவின் நேர்மை, உண்மை, மறைமுகமற்ற தன்மை மற்றப் போட்டியாளர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது. ஆனால், இவருடைய இந்த குணங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றாலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒத்துப்போகவில்லை. எனவே மற்ற போட்டியாளர்கள் இவரை தவிர்த்தபோது இவருக்கு தோள் கொடுத்தவர் ஆரவ். ஓவியாவிற்கு ஆரவ் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் ஓவியாவின் விளையாட்டு திசை மாறியது. பிறகு ஆரவுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக ஓவியா 41-ம் நாள் மருத்துவ காரணங்களால் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறினார். ஓவியா, ஆரவுடன் காதல் வலையில் சிக்காமல் இருந்திருந்தால் அவரே பிக்பாஸ் சீசன் 1-ன் வெற்றியாளர் ஆகியிருப்பார்.

பிக்பாஸ் ஓவியா


ஆரவ் எல்லா போட்டியாளர்களுடனும் நல்ல நட்புடன் பழகினார். மருத்துவ முத்தமும், ஓவியாவுடனான சச்சரவும் ஆரவிற்கு சிறிது பின்னடவைத் தந்தது. ஆனால் ஓவியா வெளியேறியப் பிறகு பிக்பாஸ் இல்லத்தில் வலிமையான போட்டியாளராக உருவெடுத்தார் ஆரவ். எல்லா டாஸ்க்கிலும் முழுவீச்சாக கலந்து கொண்டார். அவருக்கென்று உருவான ரசிகர் பட்டாளமும் எண்ணிக்கையில் பெருகியது. ஆரவுடைய இளமை, அழகான, கம்பீரமான உடற்கட்டு இளைஞர், இளைஞிகளால் ஈர்க்கப்பட்டது. மக்களிடையே ஆரவிற்கு ஆதரவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிக் கொண்டேபோனது. இறுதி சுற்றுக்கு முன்னேறிய நான்கு பேரில் கணேஷ் வெங்கட்ராமன் நான்காவதாகவும், ஹரிஷ் கல்யாண் மூன்றாவது போட்டியாளராகவும் வெளியேறினர். இறுதியில், மேடையில் கமல்ஹாசனுடன் நின்றவர்கள் சினேகனும், ஆரவும். ரசிகர்கள் அனைவரும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் யார் வெற்றியாளர் என்று பார்த்துக் கொண்டிருக்க கமல் டக்கென்று ஆரவின் கையை உயர்த்தி ஆரவ்தான் பிக்பாஸ் சீசன் 1-ன் வெற்றியாளர் என்று அறிவித்தார். பிக்பாஸ் சீசனின் முதல் வெற்றியாளர் என்ற பெருமை ஆரவுக்குக் கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 2

நல்லவர் யார், கெட்டவர் யார்?
17.6.2018 முதல் 30.9.2018 வரை (105 நாட்கள்)

பிக்பாஸ் சீசன் 2-வில் முதலில் 16 போட்டியாளர்களும் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒருவரும், மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் சீசனில் நான்கு ஃபைனலிஸ்ட்டுகளும் ஆண் போட்டியாளர்கள். இரண்டாம் சீசனில் நான்கு ஃபைனலிஸ்டுகளும் பெண் போட்டியாளர்கள். ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ரித்விகா. இதில் ஜனனி டிக்கெட் டு ஃபினாலே (ticket to finale ) வென்றார். பிக் பாஸ் சீசன் 2-வில் முக்கியமாக வெற்றியாளரைத் தவிர இருவரைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் யாஷிகா ஆனந்தும், விஜயலட்சுமியும். இவர்களின் பங்களிப்பு டாஸ்க்கில் அபரிதமானது. இறுதி சுற்றுக்கு முன்னேறிய நான்கு பேரில் ஜனனி நான்காம் போட்டியாளராக வெளியேறினார். மூன்றாம் போட்டியாளராக விஜயலட்சுமி வெளியேறினார்.

கடைசியில் மேடையில் கமல்ஹாசனுடன் இருந்தவர்கள் ஐஸ்வர்யா தத்தாவும், ரித்திவிகாவும். பிக்பாஸ் சீசன் 2-வில் வெற்றியாளரை மக்கள் ஓரளவு யூகித்திருந்தனர். ஐஸ்வர்யா தத்தா சர்வாதிகார ராணி வேடம் ஏற்று பாலாஜியின் மீது குப்பை கொட்டிய சமயத்தில் இருந்தே அவர் மேல் எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக எழத் தொடங்கின. மேலும் சில நடவடிக்கையால் மக்கள் ஐஸ்வர்யா தத்தாவை வெளியே அனுப்புவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிக்பாஸ் அவரை ஏதாவது தந்திரம் செய்து நாமினேஷனில் வராமல் பார்த்துக் கொண்டார். பிறகு சிறிது சிறிதாக டாஸ்க்கில் நன்றாக பங்கெடுத்து மக்கள் அபிமானத்தை பெற்றார். முதல் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு பெற்றார். பின் மேடையில் கமலுடன் முதல் இரண்டு போட்டியாளர்களில் ஒருவராக நின்றார்.

பிக்பாஸ் ரித்விகா
பிக்பாஸ் ரித்விகா

ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவையான பொறுமை மற்றும் பிறருடன் இணக்கமாகப் பழகுதல் என்ற இரு குணங்களையும் பெற்றிருந்தார். மேலும் ரித்திகா பிக்பாஸின் விதிமுறைகளை சரியாக பின்பற்றியது, தேவையான இடத்தில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியது, போட்டியாளர்களின் தன்மைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொண்டது , எதைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு சிந்தித்து பேசிவது, அவருடைய நேர்மை, நேரடியாக பேசுவது, நல்ல ஐக்யூ( IQ) மற்றும் ஈக்யூ (Emotional Quotient)ஆகிய குணங்களின் மூலம் மக்களின் பேராதரவை பெற்று மேடையில் கமலுடன் முதல் இரண்டு போட்டியாளர்களில் ஒருவராக நின்றார்.

இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த ரித்விகாவிடம் சில குறைகளும் இருந்தன. முக்கியமாக அவரால் யாஷிகா, விஜயலட்சுமியை போன்று டாஸ்க்கில் தீவிரமாக பங்கேற்க முடியவில்லை. அவர்களுடன் ஒப்பிடும்போது ரித்விகா உடல் ரீதியாக அவ்வளவு வலிமையாக இல்லை.

இருந்தபோதும், மேடையில் கமல்ஹாசனுடன் ரித்விகாவும் ஐஸ்வர்யா தத்தாவும் நின்ற பொழுது இருவரைப் பற்றியும் மக்கள் மேற்கூறிய கருத்துக்களை அலசி, ஆராய்ந்து ஓட்டுகள் போட்டதால் வெற்றியாளர் யார் என்பதை சுலபமாக, முன்பே யூகித்து வைத்திருந்தனர். மக்கள் நினைத்தவாறே கமல்ஹாசன் ரித்விகாவின் கையை உயர்த்தி அவர்தான் பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் என்பதை உறுதிப்படுத்தினார்.

இதுவரை நடந்த பிக்பாஸ் நான்கு சீசன்களில் வெற்றி பெற்ற ஒரே பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர் ரித்விகா.





பிக்பாஸ் சீசன் 3

இது வெறும் ஷோ அல்ல... நம்ம லைஃப்!
23.6.2019 முதல் 6.10.2019 வரை (105 நாட்கள்)

பிக்பாஸ் சீசன் 3-ல் முதலில் 15 போட்டியாளர்களும் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருவரும் மறுபடியும் ரீ என்ட்ரியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளரும் நுழைந்தனர். முதல் நான்கு ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின்.இரண்டு பெண் போட்டியாளர்கள் இரண்டு ஆண் போட்டியாளர்கள் இதில் டிக்கெட் டு ஃபினாலே (ticket to finale) வென்றவர் முகேன். 

ஷெரின் நான்காவது போட்டியாளராகவும் லாஸ்லியா மூன்றாவது போட்டியாளராகவும் வெளியேறினர். மேடையில் கமல்ஹாசனுடன் சாண்டியும் முகேன் ராவும் நின்றனர்.

பிக்பாஸ் முகேன் ராவ்
பிக்பாஸ் முகேன் ராவ்

சாண்டி சீசன் 3-ஐ மிகவும் இலகுவாக, ஜாலியாக கொண்டு சென்றார். அவருடைய நகைச்சுவை உணர்வு மக்களை ஈர்த்தது. ஒரு இடத்தில் கூட அவர் கோபப்பட்டு மற்ற போட்டியாளர்களை கத்தியதில்லை. பிக்பாஸை குருநாதா என்று அவர் கூப்பிடும் அழகே அழகு. பதிலுக்கு பிக்பாஸ் அவரை சிஷ்யா என்று அழைத்தது மேலும் சிறப்பாகும். வி ஆர் பாய்ஸ் (we are boys) என்ற பாய்ஸ் குழுவை (boys gang) அமைத்து பிக்பாஸ் சீசன் 3-ஐ கலகலப்பாக்கினார்.

இதனால் சாண்டியும் முகேனும் மேடையில் நின்றபோது சாண்டிக்கு வெற்றியாளர் ஆகும் வாய்ப்பு இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். அதே சமயத்தில் முகேன்ராவின் இளமை, அவருடைய கோபம், அழுகை அபிராமியின் ஒருதலைக் காதலை அவர் கையாண்ட விதம், டாஸ்க்கில் அவர் காட்டிய முழு ஈடுபாடு மக்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக 'அன்பு ஒன்றுதான் அனாதை' என்கிற அவரது டயலாக்கும், அவர் பாடிய 'சத்தியமா நான் சொல்றேன்டி' என்ற பாடலும் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக காதலிப்பவர்கள் மற்றும் காதல் தோல்வி அடைந்தவர்கள் மத்தியில் பிரபலமானது. பலரது வாட்ஸப் ட்யூனாக இப்பாடல் அமைந்தது.

முகேன் மலேசிய நாட்டை சேர்ந்தவர். எனவே அவருக்கு அவருடைய சொந்த நாடான மலேசிய மக்களின் ஆதரவும் பெருமளவில் கிட்டியது. அனைவரின் அன்பையும் பெற்று முக்கியமாக இளைய சமுதாயத்தின் அதிக ஓட்டுக்கள் பெற்றார் முகேன். மேடையில் கமல்ஹாசன் முகேனின் கையை உயர்த்தி அவரை பிக்பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளராக அறிவித்தார். சாண்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பிக்பாஸ் சீசனிலேயே வெளிநாட்டை சேர்ந்தவர் வெற்றி கோப்பையை கைப்பற்றிய பெருமை முகேனை சேரும்.

பிக்பாஸ் சீசன் 3-ல் சில குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வுகள் நடந்தன!

1. வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றனர். முகேன் மலேசிய நாட்டை சேர்ந்தவர். தர்ஷனும், லாஸ்லியாவும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

2. போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் முப்பத்தைந்தாம் நாள் தவறான நிகழ்வைப்பற்றி சொன்னதற்காக சேனலால் வெளியேற்றப்பட்டார்.

4. போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் 21-ம் நாள் வெளியேற்றப்பட்டார். மீண்டும் 50-ம் நாள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக, ரீ- என்ட்ரி (re entry )ஆனார். 84-ம் நாள் இரண்டாவது முறையாக குறைந்த வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டார்.

5. போட்டியாளர்களில் ஒருவரான கவின் 94-ம் நாள், ''ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் விருப்பப்பட்டால் 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இப்போதே வெளியேறலாம்'' என பிக்பாஸ் அறிவித்தபோது பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 4

தப்புன்னா தட்டி கேட்பேன்... நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்!
4.10.2020 முதல் 17.1.2020 வரை (105 நாட்கள்)
பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 4-ல் முதலில் 16 போட்டியாளர்களும் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இரண்டு போட்டியாளர்களும் நுழைந்தனர்.

இந்த சீசனில் 6 பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டனர். கேப்ரில்லா, சோம் சேகர், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி அர்ஜுனன். இவர்களில் சோம் டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார். ஃபைனலிஸ்ட்டில் இரண்டு பெண் போட்டியாளர்களும் நான்கு ஆண் போட்டியாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த சீசனில் கடைசி வாரத்தில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்தபோது, வெளியில் நடப்பதை அக்குவேறு ஆணிவேராக புட்டு புட்டு வைத்ததில், உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஆரியைத் தவிர மற்றவர்கள் `இனி மேல் விளையாடி எந்த லாபமும் இல்லை' என்று விளையாட்டில் எந்த சுவாரஸ்யத்தையும் காட்டவில்லை. மாறாக வெளியே வந்த பிறகு தங்கள் தொழில் பாதிக்கப்படுமோ, மக்கள் எப்படியெல்லாம் ட்ரோல் (troll) செய்வார்களோ என அச்சம்கொள்ளத் தொடங்கினர். முக்கியமாக ரியோ முகத்தில் அந்த சோகமும் பீதியும் கடைசிவரை இருந்தது.


அடுத்ததாக, குறைவான வாக்குகள் பெற்ற ரம்யா பாண்டியன் நான்காவது போட்டியாளராக வெளியேறினார். ரம்யாவை பொறுத்தவரை அவர்கள் நியூட்ரல் போட்டியாளர் என்று காண்பித்துக் கொள்ள விரும்பினார். அதனால் யாரையாவது அவருடைய ஃபிரண்ட் என்று சொல்லிவிட்டால் அவருக்கு கோபம் வந்து விடும். 

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இவருக்கு அடுத்து மூன்றாவதாக வெளியேறியவர் ரியோ ராஜ். இவர் ''குரூப்பிஸம் இல்லை, பேவரிட்டிஸம் இல்லை'' என்று சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்தவர். கடைசி வாரம் சிறிது முனைப்புடன் விளையாடி இருந்தால் இவர் இரண்டாம் இடத்துக்கு வந்திருக்கலாம் அல்லது ஓட்டுகளின் வேறுபாட்டையாவது குறைத்திருக்கலாம். ஆரியின் வெற்றியை குறித்து எழுதும்போது ஃபைனலிஸ்ட்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனென்றால் ஆரி 16 கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதற்கு, மற்றவர்கள் கடைசி வாரத்தில் முனைப்புடன் விளையாடாமல் இருந்ததே காரணமாகும்.

கடைசியாக மேடையில் கமல்ஹாசனுடன் நின்றவர்கள் பாலாஜியும் ஆரி அர்ஜுனனும்.

பாலாஜி பல இடங்களில் தவறுகள் செய்திருந்தாலும் முக்கியமாக விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் மீறுவது, டாஸ்க்கில் குறுக்கு வழியில் எப்படி வெல்லலாம் என்று யோசிப்பது, அளவுக்கு மிஞ்சிய கோபம், மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது என தன் மனம் போன போக்கில் விளையாடினார். முதல் 3 சீசன் வெற்றியாளர்களைக் கூட இவர் விமர்சிக்கத்தவறவில்லை. இப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் இவரது இளமையைச் சொல்லி எமோஷனலாவது, தவறுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற குணாதிசயங்கள் பலரை கவர்ந்தது. அதனாலேயே இவர் இந்த சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ஆரி அர்ஜுனன் எப்படி முதலிடத்தை பிடித்தார்?

சக போட்டியாளர்களை ஆச்சரியப்பட வைத்த விஷயம் இது. எப்போதும் ஏதாவது கருத்துக் கூறிக் கொண்டே இருக்கிறார் என்று சக போட்டியாளர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது. எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறார் என்று சக போட்டியாளர்கள் ஆரியை வெறுத்தனர். நீண்ட சொற்பொழிவாற்றிக் கொண்டே இருக்கிறார் என்று சக போட்டியாளர்கள் அவரிடமிருந்து விலகி இருந்தனர். சனம், அனிதா கூட இவரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். இப்படி சக போட்டியாளர் ஒருவருக்கும் பிடிக்காத ஒரு நபர் எப்படி மக்களால் மட்டும் விரும்பப்பட்டார்? ஆரியை சக போட்டியாளர்கள் 11 முறை நாமினேட் செய்தார்கள். 4 முறை ஓய்வு அறைக்கு அனுப்பினார்கள். இரண்டாம் முறை அவரை ஓய்வறைக்கு அனுப்பியபோதுதான் அவர் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். அப்போதிலிருந்துதான் மக்கள் இவரை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இவருடைய எதிர்ப்பில் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் வெளிப்பட்டது. சக போட்டியாளர்கள், எப்போதும் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருக்கிறார், Blaming game ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டை இவர் மேல் சுமத்தியபோது, தனது புத்திசாலித்தனத்தால் எந்த விதத்தில் எந்த இடத்தில் மற்ற போட்டியாளர்கள் தவறு செய்கிறார்கள், அவர்மேல் அடிப்படையே இல்லாமல் எப்படி பழி சுமத்துகிறார்கள் என்று வெளிப்படுத்தினார். அவருடையடைய புத்திசாலித்தனம் மற்றும் சமயோசித நடவடிக்கைகளில் உண்மை நேர்மை இருந்ததை மக்கள் உணர்ந்தனர். அதனாலேயே மக்களின் அன்பும் ஆதரவும் அளவுக்கு அதிகமாக கிடைத்தது. இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்பது முன்பே மக்களுக்கு, அதுவும் சில வாரங்களுக்கு முன்பே தெரிந்து விட்ட படியால், கமல்ஹாசன் ஆரியின் கையை உயர்த்தி அவர்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று கூறிய போது எல்லோரும் சந்தோஷப்பட்டார்களே தவிர யாரும் ஆச்சரியப்படவில்லை.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இதில் முக்கியமான விஷயம் முதலிடத்தை பிடித்த ஆரிக்கு 16 கோடியே 50 லட்சம் வாக்குகள் கிடைத்தது என்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த பாலாஜிக்கு ஆறுகோடி 14 லட்சம் வாக்குகள் கிடைத்தது என்றும் அறிவித்ததுதான். முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் 10 கோடியே 36 லட்சம் வாக்குகள் வித்தியாசம். ஆரி அர்ஜுனன் 10 கோடியே 36 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை எந்த சீசனிலும் இத்தனை வாக்குகளை எந்தப் போட்டியாளரும் பெறவில்லை.


பிக் பாஸ் சீசன் 4-ன் முக்கிய அம்சங்கள்!

கொரோனா பரவல் காரணமாக இந்த சீசன் லேட்டாக ஆரம்பித்தது. ஜூன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

விர்ச்சுவல் ஆடியன்ஸ் (virtual audience) ஏற்பாடு செய்யப்பட்டனர்.

தாமதமாக ஆரம்பித்த காரணத்தினால் இந்த சீசனில் போட்டியாளர்கள் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடினர்.

மற்ற சீசன்களில் நான்கு போட்டியாளர்கள்தான் ஃபைனலிஸ்ட்டாக (finalist) இருப்பார்கள். இந்த சீசனில் 6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முக்கியமாக வெளியிலிருந்து வரும் போட்டியாளர்கள் வெளியில் நடந்ததை பற்றி உள்ளே இருப்பவர்களுக்கு கூறக் கூடாது. ஆனால் இந்த சீசனில் எவிக்ட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் கடைசி வாரத்தில் உள்ளே வந்தபோது எல்லாவற்றையும் சக போட்டியாளர்களிடம் சொன்னதால், ஃபைனலிஸ்ட்டாக இருந்த போட்டியாளர்களுக்கு விளையாடும் ஆர்வம் குறைந்து விட்டது. இதனால் கடைசி வாரம் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது. பிக்பாஸ் விதிமுறைகளை தளர்த்தினாரா அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் அவர்களாகவே சொன்னார்களா? அப்படி அவர்கள் சொன்னால் பிக்பாஸ் ஏன் எச்சரிக்கவில்லை.

பிக்பாஸ் அர்ச்சனா
பிக்பாஸ் அர்ச்சனா

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு நிகழ்வு இந்த சீசனில் நடைபெற்றது.

பிக்பாஸ் சீசன் 4-ஐ அர்ச்சனா வருவதற்குமுன், வந்தபின் என இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். அர்ச்சனா ஆரம்பித்து வைத்த அன்பு குழுவின் அட்டகாசங்களை ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். கர்மா ஒரு பூமராங் என்பார்கள். அன்பு குழுவை சேர்ந்த ரியோவின் தெளிவற்ற வாதத்தால் அவரது அன்பு சகோதரி நிஷா எவிக்ட் ஆவதற்கு முதல் நாள், கமல்ஹாசனால் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். இதுவரை எந்த சீசனிலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை. நிஷா ஓய்வறைக்கு சென்றபோதுதான் ஜித்தன் ரமேஷ் எவிக்ட் செய்யப்பட்டார். அந்த வாரம் (10வது வாரம்) டபுள் எவிக்ஷன் நடந்தது.

முதல் மூன்று சீசனில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பிக்பாஸ் சிறுசிறு தண்டனைகளை கொடுப்பார். இந்த முறை எதுவும் இல்லை. அடுத்த சீசனில் (season 5) என்னென்ன விதிமுறைகளை பிக்பாஸ் தளர்த்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
















No comments:

Post a Comment

Rani Kannan-Write Ups

script data-ad-client="ca-pub-76 googlesyndication 22963767210638" async src="https://pagead2..com/pagead/js/adsbygoogle.js&q...